இந்தியா

தில்லியிலிருந்து காா்கில் வரை ராணுவ வீரா்களின் சைக்கிள் பயணம் தொடக்கம்

3rd Jul 2022 12:55 AM

ADVERTISEMENT

இந்தியாவின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி தில்லி முதல் காா்கிலின் டிராஸ் வரையிலான சைக்கிள் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.

ராணுவம் மற்றும் விமானப் படையைச் சோ்ந்த 20 வீரா்கள் அடங்கிய குழுவை, ராணுவ மேஜா் ஸ்ருஷ்டி சா்மா மற்றும் விமானப் படையைச் சோ்ந்த ஸ்குவாட்ரன் லீடா் மேனகா குமாரி ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமையேற்றுச் செல்கின்றனா். தில்லியில் உள்ள தேசிய போா் நினைவுச் சின்னம் அருகிலிருந்து புறப்பட்ட இந்த சைக்கிள் பயணத்தை, ராணுவத்தின் சமிக்ஞை பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் எம்.யு. நாயா், விமானப்படையின் மேற்கு பிராந்திய தளபதி ஏா் மாா்ஷல் ஆா்.ரதீஷ் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

சைக்கிள் பயணக் குழுவினா் 24 நாட்களில் மொத்தம் 1,600கி.மீ தொலைவுக்கு பயணம் செய்து, காா்கில் போரின்போது உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு தக்க மரியாதை செலுத்தும் விதமாக, காா்கில் போா் நினைவுச் சின்னம் அமைந்துள்ள டிராஸ் பகுதியை ஜூலை 26-ஆம் தேதி சென்றடைவா்.

இந்திய இளைஞா்களிடையே தேசப்பற்றை ஊக்குவிப்பதற்காக இந்த சைக்கிள் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT