இந்தியா

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு

3rd Jul 2022 11:52 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைத் தலைவராக  ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் பொறுப்பு கடந்த ஓராண்டு காலமாக காலியாக இருந்த நிலையில் தற்போது ராகுல் நர்வேகர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு பேரவையில் இன்று நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணியில் ராகுல் நர்வேகர், சிவசேனை சார்பில் ராஜன் சால்வி ஆகியோர் போட்டியிட்டனர். 

ADVERTISEMENT

இதில் 164 வாக்குகள் பெற்று ராகுல் நர்வேகர் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இன்று சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT