இந்தியா

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவீஸ் முதல் உரை: பேசியது என்ன?

3rd Jul 2022 04:03 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிர முதல்வர் மற்றும் துணை முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் முதன்முதலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:

"தேவேந்திர ஃபட்னவீஸிடம் 115 உறுப்பினர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். என்னிடம் 50 பேர்தான் உள்ளனர். இருந்தாலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித் ஷா என்னை முதல்வராக்கினர். பாஜகவின் இந்த முடிவானது, பலரது கண்களைத் திறந்துள்ளது.

பாலாசாகேப் தாக்கரேவின் நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது பாஜக - சிவசேனை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதுவரை எதிர்க்கட்சிகளிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறியதைதான் நாம் பார்த்தோம். ஆனால், இந்த முறை ஆளும் தலைவர்கள் எதிர்க்கட்சிகளிடம் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்கமகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு

நானே அமைச்சர்தான், இன்னும் சில அமைச்சர்கள் ஆளும் தரப்பிலிருந்து வெளியேறினோம். பாலாசாகேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திகே ஆகியோரது சித்தாந்தத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள என்னைப் போன்ற சாதாரண தொண்டனுக்கு இது மிகப் பெரிய விஷயம்" என்றார் ஷிண்டே. 

தொடர்ந்து துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியது:

"ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக, சிவசேனை அரசு மகாராஷ்டிரத்தின் கனவுகளை நிறைவேற்ற முயற்சிக்கும். இதற்கு நீங்கள் (சட்டப்பேரவைத் தலைவர்) முழு ஒத்துழைப்பைக் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.  

வழக்கறிஞர் ராகுல் நார்வேகர் இளம் சட்டப்பேரவைத் தலைவர். மகாராஷ்டிர சட்டப்பேரவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிலேயே இவர்தான் இளம் பேரவைத் தலைவர். சிந்தனைகளுக்கு வயது வரம்பே கிடையாது" என்றார் ஃப்டனவீஸ்.

முன்னதாக, பாஜகவின் ராகுல் நார்வேகர் 164 வாக்குகள் ஆதரவுடன் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Eknath Shinde
ADVERTISEMENT
ADVERTISEMENT