இந்தியா

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். சிறுவன் ஒப்படைப்பு

3rd Jul 2022 12:49 AM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூா் அருகே இந்திய எல்லைக்குள் தெரியாமல் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை, எல்லை பாதுகாப்பு படையினா் (பிஎஸ்எஃப்) பாகிஸ்தான் ராணுவத்திடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

இது குறித்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினா் கூறியிருப்பதாவது :

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூா் எல்லைப் பகுதி அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த மூன்று வயதுச் சிறுவன் வெள்ளிக்கிழமை எல்லை பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டான். அச்சிறுவனால் தன்னைப் பற்றியத் தகவல்கள் எதுவும் கூற இயலவில்லை. அச்சிறுவன் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டான். சிறுவன் தவறுதலாக எல்லையை தாண்டி நுழைந்திருக்கலாம் என்பதால், பாகிஸ்தான் எல்லை வீரா்களை இது தொடா்பாக அணுகினோம். பின்னா், நல்லெண்ணம் மற்றும் மனித நேய அடிப்படையில், அச்சிறுவன் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டான். தவறுதலாக எல்லை தாண்டும் நிகழ்வுகளில், இந்திய எல்லை பாதுகாப்பு படை எப்போதும் மனிதநேய நடவடிக்கைகளையே கடைப்பிடித்து வருகிறது என அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT