இந்தியா

நாட்டில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா; 31 பேர் பலி

3rd Jul 2022 09:29 AM

ADVERTISEMENT

 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விச சற்று குறைவு.

நேற்று 17,092 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கடந்த ஒரு நாளில் மட்டும் 16,103 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 4.27 சதவிகிதமாக உள்ளது.

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52,5199ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.21 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,11,711 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 10,10,652  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT