இந்தியா

ஃபட்னவீஸ் மட்டும் ஒப்புக்கொண்டிருந்தால்.. : சட்டப்பேரவையில் ஆதித்ய தாக்கரே பேச்சு

3rd Jul 2022 03:20 PM

ADVERTISEMENT


தேவேந்திர ஃபட்னவீஸ் மட்டும் ஒப்புக்கொண்டிருந்தால், இந்த நிலைமையே வந்திருக்காது என சிவசேனை எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

ஆதித்ய தாக்கரே பேசியதாவது:

"தேவேந்திர ஃபட்னவீஸிடம் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று கூறினோம். இதற்கு அவர் ஒப்புக்கொண்டிருந்தால், இந்த நிலைமையே வந்திருக்காது. இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டதால், பெரும்பாலும் இதுவும்கூட மாறியிருக்கும்" என்றார்.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இன்று வந்திருந்த அதிருப்தி எம்எல்ஏ-க்களால் எங்களைப் பார்க்கவே முடியவில்லை. எத்தனை நாள்களுக்கு இப்படி ஒரு விடுதியிலிருந்து இன்னொரு விடுதிக்கு மாறப்போகிறீர்கள்? ஒருநாளைக்கு இவர்கள் அவரவர் சட்டப்பேரவைத் தொகுதிக்குச் செல்ல வேண்டும். அப்போது எப்படி அவர்கள் மக்களை எதிர்கொள்வார்கள்?" என்றார் ஆதித்ய தாக்கரே.

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், இரண்டு கட்சிகளுக்கிடையே உடன்பாடு எட்டப்படாததால், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : shiv sena
ADVERTISEMENT
ADVERTISEMENT