இந்தியா

சமாஜவாதியில் அனைத்துப் பதவிகளும் கலைப்பு: அகிலேஷ் யாதவ்

3rd Jul 2022 03:43 PM

ADVERTISEMENT

சமாஜவாதியில் கட்சித் தலைவர் பதவி தவிர மற்ற அனைத்துப் பதவிகளும் கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சியின் தோல்விக்குப் பிறகு அகிலேஷ் யாதவ் இந்த முடிவினை எடுத்துள்ளார். சமாஜவாதி கட்சி ராம்பூர் மற்றும் ஆசாம்கார்க் தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்தது.

இது குறித்து சமாஜவாதி தரப்பில் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: “சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைவர் பதவி தவிர கட்சியின் அனைத்துப் பதவிகளையும் உடனடியாக கலைப்பதாக தெரிவித்துள்ளார். தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள்,மாவட்ட நிர்வாக அமைப்புகள், இளைஞரணி மற்றும் மகளிரணி பதவிகள் என அனைத்தும் கலைக்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேச இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவிடம் ராம்பூர் மற்றும் ஆசாம்கார்க் என இரண்டு முக்கிய மக்களவை தொகுதிகளையும் இழந்தது. பாஜக வேட்பாளர் கான்ஷ்யாம் சிங் லோதி சமாஜவாதியின் முகமது ஆசிம் ராஜாவை ராம்பூர் தொகுதியில் தோற்கடித்தார். ஆசாம்கார்க் தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் லால் யாதவ் வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

இந்த இரு தொகுதிகளும் சமாஜவாதி கட்சியின் மிக முக்கியத் தொகுதிகளாகும். அகிலேஷ் யாதவ் மற்றும் ஆசாம் கான் இருவரின் ராஜிநாமாவிற்கு பின்னர் இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இரு தலைவர்களும் உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்வானதையடுத்து தங்களது மக்களவை உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT