இந்தியா

வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து பிரச்னைகளும் 2024ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்படும்: அமித் ஷா

3rd Jul 2022 05:13 PM

ADVERTISEMENT

வடகிழக்கு மாநிலங்கள் நீண்ட காலமாக சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் நிரந்தர தீர்வு கொண்டுவரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தெரிவித்தார்.  ஆயுதப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தினை நாகலாந்தில் உள்ள 7 மாவட்டங்களின் 15 காவல் நிலையங்களிலில் இருந்தும் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் நீக்கியது. மணிப்பூர் மாநிலத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 15 காவல் நிலையங்களில் இருந்தும் இந்த சட்டம் நீக்கப்பட்டது. அசாமின் பல மாவட்டங்களிலும் இந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது. 

அசாம் மற்றும் மேகாலயா அரசுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றில் கடந்த மார்ச் மாதம் தலைநகர் தில்லியில் கையழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின் படி இந்த இரு மாநிலங்களுக்கும்  இடையே கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையழுத்தாவற்கு முன்பே அசாம் மற்றும் மேகாலயாவின் முதல்வர்கள் கடந்த ஜனவரி 31ஆம் தேதி இந்த விவாகரம் குறித்து முறையிட்டனர். இதனை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக அமித் ஷா தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களின் 60 சதவிகித பகுதிகளில் இந்த ஆயுதப்படை சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் வடகிழக்கு மாநிலங்கள் நீண்ட காலமாக சந்தித்து வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் பேசினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT