இந்தியா

உத்தர பிரதேசம்: மின்னல் தாக்கி பெண் பலி

2nd Jul 2022 08:15 PM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியானார்.

உத்தர பிரதேசத்தின் பக்ரி கிராமத்தில் வயலில் நெல் விதைத்துக் கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி இறந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்ரி காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்துள்ளது. 

இந்த துயர சம்பவம் குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் துர்கா பிரசாத் கூறியதாவது: “கௌசாலி (44 வயது) மற்றும் மன்ஷா (38 வயது) இருவரும் இன்று (ஜூலை 2)  மாலை வயலில் நெல் விதைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மின்னல் தாக்கியுள்ளது. அதில் கௌசாலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மன்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT