இந்தியா

சிவசேனையில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்: உத்தவ் தாக்கரே

2nd Jul 2022 09:07 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கி சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். 

சிவசேனை கட்சியின் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே,தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், பாஜக ஆதரவுடன் நேற்று மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ளார். பாஜக மூத்தத் தலைவரான தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். 

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, 'சிவசேனைக்கு துரோகம் செய்தவா்கள் இப்போது ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனையைச் சோ்ந்தவா் என்று பிரசாரம் செய்கின்றனா். அவரை சிவசேனை கட்சியின் முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது. சிவசேனையில் இருந்து சென்ற எம்எல்ஏக்கள் மக்கள் நம்பிக்கையுடன் அளித்த வாக்குகளை வீணாக்கியதுடன், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கிவிட்டனா்’ என்றார். 

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனை கட்சியில் இருந்து நீக்கி அவர் உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர் வெளியேற்றப்படுவதாக தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க |  மகாராஷ்டிரம்: ஷிண்டே அரசு மீது 4-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT