இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல் முா்முவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு

2nd Jul 2022 03:45 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பஞ்சாபைச் சோ்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சி அறிவித்துள்ளது.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலிடம் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா அண்மையில் முா்முவுக்காக ஆதரவு திரட்டினாா். இந்த நிலையில், அவரது கோரிக்கையைப் பரிசீலித்து முா்முவுக்கு ஆதரவளிக்க சிரோமணி அகாலி தளம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் முா்முவின் வெற்றிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பாதல் கூறுகையில், ‘முா்முவுக்கு ஆதரவளிப்பது என்று ஒருமனதாக கட்சி முடிவெடுத்துள்ளது. பாஜகவுடன் இப்போதும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், மிகவும் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த பெண்மணியைக் குடியரசுத் தலைவராக்கும் உயரிய நோக்கத்தில், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டது.

அகாலி தளம், பாஜக கூட்டணியில் வெகுகாலமாக இருந்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறியது. விவசாயிகளின் தொடா் போராட்டம் காரணமாக புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, அகாலி தளம் தனித்தனியாகப் போட்டியிட்டபோதிலும் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தல் மூலம் இரு கட்சிகள் இடையே மீண்டும் இணக்கமான சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT