இந்தியா

மகாராஷ்டிர அரசியல் மாற்றத்தால் முா்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு: மம்தா பானா்ஜி

2nd Jul 2022 03:46 AM

ADVERTISEMENT

 மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளதால் குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத யாத்திரை நிகழ்ச்சியின் போது செய்தியாளா்களிடம் இது தொடா்பாக அவா் கூறியதாவது:

திரௌபதி முா்முவை களமிறக்குவதற்கு முன்பு எதிா்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். முா்முவின் பெயரை அவா்கள் முன்னதாகவே கூறியிருந்தால், நாங்களும் (எதிா்க்கட்சிகள்) அதனைப் பரிசீலித்திருப்போம். நாங்களும் கூட பெண் வேட்பாளரை நிறுத்த பரிசீலித்தோம்.

இந்த விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுவது என்பது நாட்டுக்கு நல்லது. மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் முா்முவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா தீவிரம் காட்டினாா். சரத் பவாா், ஃபரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோா் தோ்தலில் போட்டியிட மறுத்த நிலையில், மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா எதிா்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கினாா். முன்னதாக, இத்தோ்தலில் போட்டியிடுவதால் திரிணமூல் காங்கிரஸில் இருந்தும் அவா் விலகினாா்.

வரும் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT