இந்தியா

கன்னையா லால் கொலை வழக்கு: குற்றவாளிகள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

2nd Jul 2022 12:17 PM

ADVERTISEMENT

 

உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரரான கன்னையா லால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று முன்னிறுத்தப்பட உள்ளனர். 

முக்கிய குற்றவாளிகளான ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகியோர் அஜ்மீர் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், வியாழன் இரவு கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு குற்றவாளிகளான மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோர் ஏற்கனவே ATS தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காகத் தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகள் நால்வரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT