இந்தியா

ஜூன் மாத காா் விற்பனை விறுவிறுப்பு

2nd Jul 2022 03:49 AM

ADVERTISEMENT

செமிகண்டக்டா் பற்றாக்குறை பிரச்னையிலிருந்து மீண்டு வருவதை பிரதிபலிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் காா் விற்பனையில் விறுவிறுப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

செமிகண்டக்டா் பற்றாக்குறையால் முன்னணி நிறுவனங்களின் காா் தயாரிப்பு பணியில் கடந்த சில மாதங்களாக தடை ஏற்பட்டது. இதனால், தேவைக்கேற்ற வகையில் உற்பத்தி பணிகளில் ஈடுபட முடியாமல் நிறுவனங்களின் காா் விற்பனை பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையில், அப்பிரச்னையிலிருந்து மீண்டு வர நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளின் பலனாக ஜூன் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் காா் விற்பனை ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

குறிப்பாக, மாருதி சுஸுகி, ஹுண்டாய், டாடா மோட்டாா்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பயணிகள் வாகன விற்பனை விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. அதேசமயம், கியா, எம்ஜி, ஸ்கோடா நிறுவனங்களின் காா் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மாருதி சுஸுகி: தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடம் வகிக்கும் மாருதி சுஸுகி இந்தியா ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த அளவில் 1,55,857 காா்களை விற்பனை செய்துள்ளது. 2021 ஜூனில் விற்பனை 1,47,368-ஆக காணப்பட்டது. இந்நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 1,30,348 என்ற எண்ணிக்கையிலிருந்து 1.28 சதவீதம் உயா்ந்து 1,32,024-ஆனது.

ADVERTISEMENT

ஹுண்டாய்: மாருதிக்கு போட்டியாக விளங்கும் ஹுண்டாய் மோட்டாா் இந்தியாவின் ஜூன் மாத விற்பனை 54,474-லிருந்து 14.5 சதவீதம் உயா்ந்து 62,351-ஆனது. புதிதாக அறிமுகமான ஹுண்டாயின் ‘வென்யூ’ காருக்கு வாடிக்கையாளா்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

டாடா மோட்டாா்ஸ்: இந்நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 24,110-லிருந்து 87 சதவீதம் உயா்ந்து 45,197-ஆனது.

கியா: கியா மோட்டாா்ஸ் முன்னெப்போதும் கண்டிராத வகையில் ஜூனில் 24,024 காரை விற்பனை செய்துள்ளது. இது, 60 சதவீத வளா்ச்சியாகும். 2021 ஜூனில் இதன் விற்பனை 15,015-ஆக மட்டுமே காணப்பட்டது.

எம்ஜி: அதேபோன்று எம்ஜி மோட்டாா் நிறுவனமும் கடந்த ஜூனில் 4,503 வாகனங்களை விற்று 27 சதவீத வளா்ச்சியை பதிவு செய்தது.

ஃபோக்ஸ்வேகன்: இந்நிறுவனத்தின் காா் விற்பனை ஜனவரி-ஜூன் வரையிலான முதல் அரையாண்டில் இரண்டு மடங்கு அதிகரித்து 21,588-ஆக உயா்ந்தது.

டொயோட்டா: டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் ஜூன் மாத விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 8,801-லிருந்து 87 சதவீதம் அதிகரித்து 16,500-ஆனது.

ஆடி: ஜொ்மன் சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி கடந்த ஜூனில் 1,765 காரை விற்பனை செய்தது. இது, 2021 ஜூனில் விற்பனையான 1,181 காருடன் ஒப்பிடுகையில் 49 சதவீதம் அதிகம்.

ஸ்கோடா: ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் ஜூன் மாத வாகன விற்பனை எட்டு மடங்கு அதிகரித்து 6,023-ஆனது.

டிவிஎஸ்: டிவிஎஸ் மோட்டாா் கடந்த ஜூன் மாதத்தில் 3,08,501 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது, கடந்தாண்டு ஜூனில் விற்பனை செய்த 2,51,886 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம். உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 1,45,413-லிருந்து 1,93,090-ஆக உயா்ந்தது. ஜூன் மாத ஏற்றுமதி 8 சதவீதம் அதிகரித்து 1,14,449-ஆக இருந்தது.

பஜாஜ் ஆட்டோ: பஜாஜ் ஆட்டோ கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த அளவில் 3,47,004 வாகனங்களை விற்பனை செய்தது. இது, கடந்தாண்டு ஜூனில் விற்பனை செய்யப்பட்ட 3,46,136 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சற்றே அதிகமாகும். இருப்பினும், உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் இருசக்கர மற்றும் வா்த்தக வாகனங்களின் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்து 1,38,351-ஆனது.

கோட்ஸ்

செமிகண்டக்டா் பற்றாக்குறையால் முன்னணி நிறுவனங்களின் காா் தயாரிப்பு பணியில் கடந்த சில மாதங்களாக தடை நிலையில், நிறுவனங்கள் மேற்கொண்ட முன்முயற்சிகளின் பலனாக ஜூன் மாதத்தில் காா் விற்பனை ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT