இந்தியா

அதிகரிக்கும் கரோனா: நாட்டில் புதிதாக 17,092 பேருக்கு தொற்று; 29 பேர் பலி

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,092 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,09,568 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.25 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 29 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 5,25,168 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 14,684 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,28,51,590-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.54 சதவீதமாக உள்ளது

நாடு முழுவதும் இதுவரை 1,97,84,80,015 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 9,09,776 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT