இந்தியா

கேரளத்தில் தீவிரமடையும் பருவ மழை: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

2nd Jul 2022 12:28 PM

ADVERTISEMENT

கேரளா: கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கேரளத்தில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இந்நிலையில் கேரளா முழவதும் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதுகுறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிக்கை விடுத்துள்ளது. அதில், ஜூலை 5-ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.  மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்க உத்திரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: காரணம்?

ADVERTISEMENT

கோழிக்கோடு, வயநாடு உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்கியது. சென்ற ஆண்டு ஜூன் 3-ல் தொடங்கியது. இந்தாண்டு ஓரிரு நாள்களுக்கு முன்பே தொடங்கியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT