இந்தியா

தம் பிரியாணியை ருசியுங்க.. பாஜக தலைவர்களை கிண்டல் செய்த அமைச்சர்

DIN


ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வரும் தலைவர்களை கிண்டல் செய்யும் விதமாக, டிஆர்எஸ் செயற்தலைவர் மற்றும் அமைச்சர் கே.டி. ராமா ராவ், உலகப் புகழ்பெற்ற ஹைதராபாத் தம் பிரியாணியை ருசியுங்கள், இரானி தேநீரை பருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்திலும், வடக்கு, மேற்கு மாநிலங்களிலும் பாஜக தனது ஆளுமையை வெற்றிகரமாகச் செலுத்தி வரும் நிலையில் அடுத்தகட்டமாக தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டு தெலங்கானாவில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை சனிக்கிழமை கூட்டியிருக்கிறது.

சரியாக 5 ஆண்டுகளுக்குப் பின் தேசிய தலைநகரான தில்லிக்கு வெளியே முக்கிய முடிவுகளை அறிவிக்கும் செயற்குழுக் கூட்டத்தை பாஜக நடத்துகிறது. 2014 இல் ஆட்சிக்கு வந்த பின் தென் மாநிலங்களில் பாஜக நடத்தும் மூன்றாவது தேசிய செயற்குழு கூட்டம் இதுவாகும்.

இரண்டு நாள் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

"மிக அழகிய ஹைதராபாத் நகரத்துக்கு, வாட்ஸ்ஆப் பல்கலைக்கழக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களை வரவேற்கிறோம்.

சொல்லாட்சியில் வல்லவர்களே, தம் பிரியாணி மற்றும் இரானி தேநீரை ருசித்து மகிழ மறந்துவிடாதீர்கள்" என்று ராமா ராவ் தனது சுட்டுரையில் கிண்டல் செய்துள்ளார்.

அதனுடன், தெலங்கானாவில் உருவாக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய திட்டப் பணிகளின் புகைப்படங்களையும் அவர் இணைத்து, வாருங்கள், தெலங்கானாவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பின் ஹைதராபாதில் பாஜக தேசிய செயற்குழு நடைபெறுகிறது. தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தனது ஆளுமையை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 3ஆம் தேதி ஹைதராபாதில் மாபெரும் பேரணியை நடத்த உள்ளது. உள்ளூா் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்தப் பேரணி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தேசிய அளவில் பாஜகவுக்கு சவால் விடும் வகையில், கே.சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் டி.ஆா்.எஸ். கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது கவனத்தை ஈா்த்துள்ளது.

தேசிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை மதியம் பாஜக தலைவா் ஜெ.பி. நட்டாவின் தொடக்க உரையுடன் தொடங்கி மோடியின் உரையுடன் நிறைவு பெறும். கூட்டத்தின் போது, தோ்தல் நடைபெறும் மாநிலங்களின் அமைப்பு செயல்பாடுகள் குறித்த அறிக்கையும் சமா்ப்பிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT