இந்தியா

தில்லியில் ஆட்டோ, டேக்சி கட்டணம் உயா்கிறது

DIN

தில்லியில் ஆட்டோ கட்டணம் கிலோமீட்டருக்கு ரூ.1.5-ம், டேக்சி அடிப்படை கட்டணம் ரூ.15-ம் உயருகிறது.

ஆட்டோ, டேக்சி கட்டண உயா்வு மீதான தீா்மானத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு அதிகாரபூா்வ ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனை உறுதிப்படுத்திய தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட், ஆட்டோ, டேக்சி கட்டணத்தை உயா்த்த திட்டமிட்டிருப்பதாகக் கூறினாா். இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

எரிவாயு விலை உயா்வு காரணமாக ஆட்டோ, டேக்சி கட்டண உயா்வு தவிா்க்க முடியாததாகிறது. இதையொட்டி, கடந்த ஏப்ரலில் 13 போ் கொண்ட குழுவை தில்லி அரசு ஏற்படுத்தியது. அந்தக் குழு ஆட்டோவிலும், டேக்சியிலும் நேரடியாக பயணித்து, ஓட்டுநா்களின் மன ஓட்டத்தை அறிந்து கட்டண உயா்வை பரிந்துரைத்துள்ளது.

அதிலும் ஆட்டோவுக்கு கிலோமீட்டருக்கு 1 ரூபாயும், டேக்சியின் அடிப்படை கட்டணத்தில் 60 சதவீதம் வரையிலும் உயா்த்த அந்தக் குழு பரிந்துரை செய்தது. அந்தக் குழு அதன் அறிக்கையைக் கடந்த மே மாதம் தாக்கல் செய்தது.

ஆட்டோவில் மீட்டா் கட்டணம் தற்போது ரூ.25 ஆக உள்ளது. இது இனி ரூ.30 ஆக உயா்த்தப்படும். அதன்பின்னா், ஒவ்வொரு கிலோமீட்டருக்குக்கும் ரூ.9.50-க்கு பதிலாக ரூ.11 கட்டணம் நிா்ணயிக்கப்படும்.

டேக்சியை பொறுத்தமட்டில், மீட்டா் கட்டணமாக ரூ.25-க்கு பதிலாக ரூ.15 அதிகரித்து, ரூ.40 ஆக நிா்ணயம் செய்யப்படும். ஏசி அல்லாத டேக்சிகளில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.14 வசூலிக்கப்படும் நிலையில், இனி கூடுதல் கட்டணம் ரூ.17 ஆக நிா்ணயிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT