இந்தியா

26 ஆண்டுகளுக்குப் பின் நிரபராதியென விடுதலை செய்யப்பட்டவர்!

2nd Jul 2022 01:00 PM

ADVERTISEMENT

 

பொய் வழக்கில் கைதான நபர் ஒருவருக்கு 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதியென தீர்ப்பு வழங்கி உத்திர பிரதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

1996 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் ‘கட்டா’ என்னும் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து கூலித் தொழிலாளியான ராம் ரத்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 ஆண்டுகளாக வழக்கு நடந்திருக்கிறது. 400 நீதிமன்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர் நிரபராதியென முசாபர்நகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ADVERTISEMENT

இந்த தீர்ப்பு குறித்து ராம் ரத்தன் கூறியதாவது:

இதில் மகிழ்சியடைய ஏதுமில்லை. பொய் வழக்கு என் வாழக்கையை நாசமாக்கிவிட்டது. என்னுடைய அனைத்து செல்வத்தையும் இழந்துவிட்டேன். எனது குழந்தைகள் படிக்க முடியவில்லை. வாழ்க்கையின் பாதி நாள் வழக்கு விசாரனைக்கு சென்றே கழிந்து விட்டது. 

எனக்கு அப்போது 44 வயது. எந்தவித தகவலும் தெரிவிகாமல் என்னை காவல்துறையினர் கைது செய்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 2 மாதங்களுக்கு மேலாக ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக என் மீது வழக்கு தொடரப்பட்டது.  காவல்துறையினர் என்னிடம் துப்பாகி உள்ளதாக வாதிட்டனர். நான் அப்போதிலிருந்தே அதிகாரிகளிடம் சொல்லி வந்தேன். இது பொய்யான வழக்கு. நான் நிரபராதி என. 3 சதாப்தமாக போராடி இதிலிருந்து விடுதலை ஆகியுள்ளேன். இறுதியில் உண்மை வென்றது ஆனால் அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியாதாயிற்று. 

எனது வாழக்கையை அழித்த காவலதிகாரி மீது நடவடிக்கையும் எனது குடும்பத்தாருக்காக இழப்பீடு தொகையையும் மட்டுமே கேட்டுக்கொள்கிறேன். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT