இந்தியா

இதை ஏன் அன்றே செய்யவில்லை? பாஜகவிற்கு உத்தவ் தாக்கரே கேள்வி

1st Jul 2022 06:48 PM

ADVERTISEMENT

சிவசேனை கட்சியைச் சேர்ந்தவரை முதல்வராக நியமிப்பதற்கு 2019ஆம் ஆண்டே ஏன் ஒப்புக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க | கட்சியினருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

முதல்வராக சிவசேனை கட்சியின் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுள்ள நிலையில் துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னவிஸ் பொறுப்பேற்றுள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய சிவசேனை கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, “2019ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பாஜக அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தாலே இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | குவாஹாட்டி: எம்எல்ஏக்கள் இருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் செலுத்தப்பட்டதா? எவ்வளவு?

சிவசேனை கட்சியைச் சேர்ந்தவரை 2.5 ஆண்டுகள் முதல்வராக பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என அமித்ஷாவிடம் தெரிவித்தபோது அதற்கு சம்மதம் அளித்திருந்தால் சிவசேனை பாஜகவுடன் தொடர்ந்து பயணித்திருக்கும். அன்றைக்கு பாஜக தனது வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் மகா விகாஸ் அகாதி கூட்டணி அமைந்திருக்காது" என உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

சிவசேனையின் ஆட்சிக்கு எதிராக சொந்தக் கட்சியினரே நடத்திய கிளர்ச்சி ஜனநாயகம் ஏமாற்றிய செயல் எனக் குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே அவர்கள் மக்களின் வாக்குகளை பயனற்று செய்துவிட்டதாகவும் விமர்சனம் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT