இந்தியா

உதய்பூர் படுகொலை: மேலும் இருவர் கைது

1st Jul 2022 01:20 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொலையாளிகளான கௌஸ் முகமது மற்றும் ரியாஸ் ஆகியோர் கொலையின் விடியோவை பதிவேற்றியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) பயங்கரவாத எதிர்ப்புப் படை(ஏடிஎஸ்) மற்றும் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் ஆதரவுடன் விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொடர்புடைய கூட்டாளியான மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார். 

இந்த வழக்கை என்ஐஏ மேலும் விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT