இந்தியா

ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை முறையீடு

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை தலைவர் சுனில் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார். 

மகாராஷ்டிர அரசியலில் திடீா் திருப்பமாக, ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவா் ஏக்நாத் ஷிண்டே (58) புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். ஆளுநா் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். 

இதனிடையே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திங்கள்கிழமை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை தலைவர் சுனில் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார். 

மனுவில், துணை சபாநாயகர் முடிவெடுக்கும் வரை முதல்வர் உள்பட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என கோரியுள்ளது. 

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, முதல்வர் உள்பட 16 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வலியுறுத்தினார்.

இந்த மனு ஜூலை 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT