இந்தியா

ரூ. 20 மதிப்புள்ள ஒரு கப் டீக்கு ரூ. 50 சேவை வரி... இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?

DIN


கடந்த 28-ஆம் தேதி போபாலில் இருந்து தில்லிக்கு சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவரிடம் ஒரு கப் டீக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரிகிறது. 

இந்திய இரயில்வேயில் உணவு மற்றும் பானங்களின் விலை ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ரயில் பயணத்தின் போது ஒரு கப் டீக்கு அருந்துவதற்கு ரூ.70 செலுத்தினால் ஆச்சரியப்படுவீர்கள் தானே. இருப்பினும், இது உண்மை மற்றும் ரயில் பயணத்தில் நடந்துள்ள உண்மை. 

சமீபத்தில் சதாப்தில் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியுள்ளார். அவருக்கு ஐஆர்சிடிசி சார்பில் அளிக்கப்பட்ட ரூ.70-க்கான ரசீதை பார்த்து பயணி அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதாவது, கடந்த 28 ஆம் தேதி போபாலில் இருந்து தில்லிக்கு சதாப்தி ரயிலில் பயணித்த ஒருவர் ரயில் ஒரு கப் டீ வாங்கியுள்ளார். அந்த டீயின் விலை ரூ.20. ஆனால், அதற்கு விதிக்கப்படிருந்து சேவை வரி ரூ.50 என ரசீதியில் குறிப்பிட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அந்த பயணி ரயில்வேயின் உயர்தர சேவைக்கு சான்றாக, அந்த டீக்கான ரசீதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் "ரூ. 20 மதிப்புள்ள ஒரு கப் டீக்கு ரூ. 50 சேவை வரி. மொத்தத்தில், ஒரு டீ மதிப்பு ரூ. 70. இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?" என பதிவிட்டு பகிர்ந்துள்ளார். 

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஐஆர்சிடிசிக்கு தங்களது புகார்களையும் முன்வைத்துள்ளனர். இது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், ஒரு கப் டீ ஒன்றுக்கு ரூ.70 ரசீதுக்கான காரணத்தை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதாவது, 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, ராஜ்தானி அல்லது சதாப்தி ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்யும் போது ஒரு பயணி உணவை முன்பதிவு செய்யவில்லை என்றால், டீ, காபி அல்லது உணவை ஆர்டர் செய்ய ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. பயணம். அது ஒரு கப் டீயாக இருந்தாலும் அல்லது காபியாக இருந்தாலும் சரி.

இருப்பினும், முதலில் கட்டாய தேர்வாக இருந்த இந்த அறிவிப்பு பின்னர் விருப்ப தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பயணிகள் விரும்பினால், அந்த ரயில்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்க மறுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது. 

இந்திய ரயில்வேயில் உணவு மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கும் ஐஆர்சிடிசி-யின் சேவை குறித்து, இதுபோன்ற பல புகார்கள் மீண்டும் மீண்டும் ரயில் பயணிகள் தொடர்ந்து முன்வைத்து வந்தாலும், கவனிப்பாரின்றி தொடர் கதையாகி வருவதுதான் வேதனையான ஒன்று. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT