இந்தியா

‘இந்தியா இந்துக்களுக்கு மட்டுமானதல்ல’: மத மோதல்கள் குறித்து அமர்த்தியா சென் கருத்து

1st Jul 2022 03:46 PM

ADVERTISEMENT

ஒற்றுமையை நிலைநாட்ட மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என நோபல் அறிஞரும், பொருளாதார நிபுணருமான அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா முகமது நபி குறித்து தெரிவித்த கருத்தும் அதனைத் தொடர்ந்து உதய்பூரில் தையல்கடைக்காரர் கொல்லப்பட்டதும் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளன.

இதையும் படிக்க | ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

இந்நிலையில் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கக் கூடாது என பொருளாதார மேதையும், நோபல் பரிசு வென்றவருமான அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அமர்த்தியா ஆய்வு மையத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்று பேசிய அவர், “யாராவது எனக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறதா எனக் கேட்டால் ஆமாம் என பதிலளிப்பேன். அதற்கு காரணமும் உண்டு. நாட்டின் தற்போதைய நிலை அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | என்னவிதமான சவால்களை நாம் சந்திக்கவில்லை? ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து பேசிய அவர்,  “நாடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். வரலாற்றியல் தாராளமயத்தால் நாடு பிரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாக இயங்க வேண்டும்” என அமர்த்தியா சென் தெரிவித்தார்.

மேலும் அவர்,  “இந்தியா வெறும் இந்துக்களுக்கு மட்டுமானதல்ல. அதேபோல் இஸ்லாமியார்களால் மட்டும் இந்தியாவை உருவாக்க முடியாது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT