இந்தியா

பாட்னா நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடிப்பு: காவலர் காயம்

1st Jul 2022 04:23 PM

ADVERTISEMENT

பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

பிகார் மாநிலம், பாட்னா பல்கலைக்கழகத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

இதையும் படிக்க- பணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் ஆதரவு

உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT