இந்தியா

வருமான வரித்துறையிடமிருந்து காதல் கடிதம்.. சரத் பவார் கிண்டல்

1st Jul 2022 04:23 PM

ADVERTISEMENT

 

வருமான வரித்துறையிடமிருந்து எனக்கும் ஒரு காதல் கடிதம் வந்துள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது சரத் பவார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துடன், கடந்த 2020ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் போடடியிட்டபோது பதிவு செய்த பிரமாணப் பத்திரத்தை ஒப்பிட்டு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்னவாகும்? விலை அதிகரிக்குமா?

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாதக் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, புதிதாக சிவசேனை - பாஜக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு மறுநாளே, சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இது குறித்து சரத் பவார் தனது சுட்டுரைப் பக்கத்தில் மராத்தி மொழியில் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தங்களுக்கு நோட்டீஸ் வந்திருப்பதாகக் கூறியுள்ளனர். தற்போது இந்த புதிய முறை தொடங்கியிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, அமலாக்கத் துறையின் பெயர் கூட எங்களுக்குத் தெரியாது. தற்போதெல்லாம் கிராம மக்கள் கூட, அமலாக்கத் துறையிடம் உன்னை மாட்டிவிடுவேன் என்று கிண்டலடிக்கும் நிலையில் உள்ளனர்.

அரசியலில் பல்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக இந்த அமைப்புகளை பயன்படுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. அனைவருக்கும் வந்திருப்பதைப் போல வருமான வரித்துறையிடமிருந்து எனக்கும் காதல் கடிதம் வந்துள்ளது. 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவு செய்த பிரமாணப் பத்திரத்தைக் கூட அவர்கள் தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT