இந்தியா

‘நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த ஜிஎஸ்டி’: ப.சிதம்பரம் விமர்சனம்

1st Jul 2022 06:08 PM

ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கு பல்வேறு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்து வருகின்றன. 

இதையும் படிக்க | அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: சீமான்

இந்நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு தொடர்ந்து விமர்சனம் தெரிவித்துவரும் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மோசமடைய செய்துள்ளதாகத் தெரிவித்த ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி 2.0 நடவடிக்கையின் மூலம் இதனை சரிசெய்யும் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமர் மோடி

“ஜிஎஸ்டி வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலேயே குறைபாடுகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இதனால் பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து தளங்களும் மோசமாக நலிவடைந்துள்ளன” என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

90 சதவிகித வேலை வாய்ப்புகளை வழங்கும் சிறு,குறு தொழில்களை பரந்த அளவில் பாதிப்புக்குள்ளாகியதற்கு குறைபாடான ஜிஎஸ்டி அமலாக்கமே காரணம் எனத் தெரிவித்த ப.சிதம்பரம் இது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான நம்பிக்கையை தகர்த்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT