இந்தியா

கேரளத்தில் ஆந்திராக்ஸ் பரவல்

1st Jul 2022 01:48 AM

ADVERTISEMENT

கேரளத்தின் அதிரப்பள்ளி வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக காட்டுப்பன்றிகள் ஆந்திராக்ஸ் பாதிப்பால் மடிந்து வருவது அதிகரித்து வருகிறது. எனினும், இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று திருச்சூா் மாவட்ட ஆட்சியா் ஹரிதா வி.குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஆந்திராக்ஸ் பாதிப்பு சில காட்டுப் பன்றிகளுக்கு மட்டும் இருந்தது. அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு பரவவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதா்களுக்கு இந்த நோய் பாதிப்பு பரவுவது மிகவும் அரிது. ஆகையால், இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன’ என்றாா்.

இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து கால்நடைத் துறை கண்காணித்து வருகிறது என்று அந்த மாநில வன மற்றும் கால்நடைத் துறை அமைச்சா் ஏ.கே. சசீந்திரன் தெரிவித்தாா்.

அதிரப்பள்ளி வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக 6 காட்டுப்பன்றிகள் மடிந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT