இந்தியா

புதுச்சேரியில் புதிதாக 855 பேருக்கு கரோனா

29th Jan 2022 01:25 PM

ADVERTISEMENT


புதுச்சேரியில் புதிதாக 855 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி கரோனா தரவுகளை சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ளார். இதன்படி, 3,465 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 855 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்கமின் துறை தனியார்மயம்: புதுச்சேரியில் தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

இதில் புதுச்சேரியில் 570 பேரும், காரைக்காலில் 172 பேரும், ஏனாமில் 102 பேரும் மற்றும் மாஹேவில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12,542 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இதில் 182 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள 12,360 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,604 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,45,359 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,923 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 15,31,595 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT