இந்தியா

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு : புதுவை ஆளுநர்

28th Jan 2022 12:35 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுவையில் முதல்வருடன் ஆலோசித்தப் பிறகு, விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

புதுவை ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் விழா, புதுச்சேரி காராமணிக்குப்பம் முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று, பயனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கினார்.

அப்போது, துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளரிடம் கூறியதாவது:

புதுவையில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. பொது முடக்கம், ஊரடங்கு தடை ஏதும் போடாமல், மக்களுக்கு பொருளாதாரம் பாதிப்பு இல்லாத வகையில், எச்சரிக்கையாக இருந்து, கரோனா தடுப்பில் புதுவை ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் தற்போது ஆரோக்கியமான சூழல் உள்ளதால் பள்ளிகள் திறக்கப்படுகிறது. நாம் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருவதால், புதுவையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சருடன் கலந்து ஆலோசித்து விரைவில் திறக்கப்படும். பள்ளிகள் உடனே திறக்க வேண்டும் என்பது தன் எனது எண்ணம்.

புதுச்சேரி தவில் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது பெருமை அளிக்கிறது. இப்போதெல்லாம் சிபாரிசுகள் எதுவும் இல்லாமல் தகுதியுள்ளவர்களுக்கு, மத்திய அரசு மூலம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு வருகிறது என்றார். அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT