இந்தியாவில் இதுவரை 164.44 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,35,692 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை மொத்தம் 1,64,44,73,216 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்
ADVERTISEMENT
கடந்த 24 மணி நேரத்தில் 3,47,443 பேர் கரோனா நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை மொத்தம் 3,80,24,771 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் 93.60 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.