இந்தியா

மூக்கு வழியாக செலுத்தப்படும் கோவேக்ஸின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி

DIN

மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைகளை நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊசி உள்ளிட்டவை இல்லாமல் நேரடியாக மூக்கு வழியாக செலுத்தப்படுவதன் காரணமாக குறைந்த காலத்தில் அதிக நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பு மருந்து செலுத்த முடியும் என பாரத் பயோடெக் கூறியுள்ளது.

கரோனா வைரஸ் நமது உடலில் மூக்கு வழியாகவே பரவுகிறது. எனவே, மூக்கு வழியே செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து இதை தடுப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு தனியாகப் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் யாரும் தேவையில்லை என்றும் மிக எளிதாகச் செலுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ளக் கடந்த மாதம் பாரத்பயோடெக் அனுமதி கேட்டிருந்தது. 

முன்னதாக, கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை நேரடியாகச் சந்தையில் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி எப்போது நேரடியாகச் சந்தையில் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT