இந்தியா

மகாராஷ்டிரத்தில் உணவுக் கடையின் மீது கார் மோதல்: பெண் பலி, 5 பேர் காயம்

27th Jan 2022 11:23 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சானி கடற்கரையில் உணவுக் கடையின் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஜனவரி 26 பொது விடுமுறை நாள் என்பதால், அன்று மாலை தாராபூரில் உள்ள சிஞ்சானி கடற்கரையில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். அதிக கூட்டத்தையும் பொருட்படுத்தாமல், கார் ஒன்று கடற்கரைக்கு வந்தது. இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்கவேண்டும் என்பதற்காக காரை வளைத்ததில், திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள உணவுக் கடை ஒன்றின் மீது கார் மோதியது. 

கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து, அங்கு ஒருமணி நேரம் கலவரம் நீடித்தது. சம்பவ இடத்துடக்கு வாங்கான் காவல்நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். 

Tags : palghar
ADVERTISEMENT
ADVERTISEMENT