இந்தியா

மும்பை: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயம்

27th Jan 2022 10:54 AM

ADVERTISEMENT

மகா​ராஷ்​டிர மாநி​லம்,  மும்பை​யில் கிழக்கு பந்த்ரா பகு​தியைச் சேர்ந்த பெஹ்ரம் நகரில் அமைந்துள்ள உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிழக்கு வாந்ரே தொகுதியின் எம்எல்ஏ ஜீஷன் சித்திக், ‘ பெஹ்ராம் நகரில் இன்று 5 மாடி கட்டடம் இடிந்துவிழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 9 பேரை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் ஒரு பெண்மணிக்கு எலும்பு முறிவும், இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஜன. 22 ஆம் தேதி மத்​திய மும்பை​யில் டாா்​டியோ பகு​தி​யில் அமைந்துள்ள உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில்ஏற்​பட்ட பெரும் தீ வி​பத்​தில் 7 போ் பலியானதுடன் 23 போ் படு​கா​ய​மடைந்​த​து குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT