இந்தியா

கோவிஷீல்ட், கோவேக்ஸின்தடுப்பூசிகளின் சந்தை விலை ரூ.275?

27th Jan 2022 02:54 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெற்றதும் கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளின் ஒரு தவணை விலை ரூ.275-ஆக நிா்ணயிக்கப்படலாம் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இதுதவிர சேவைக் கட்டணமாக ரூ.150 விதிக்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தடுப்பூசிகள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனா்.

தற்போது தனியாருக்கு கோவேக்ஸின் தடுப்பூசி தலா ரூ.1,200-க்கும், கோவிஷீல்ட் ரூ.780-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரூ.150 சேவைக் கட்டணமும் அடங்கும். இந்தியாவில் இந்த இரு தடுப்பூசிகளும் அவசரகால பயன்பாட்டுக்காகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில் நிபந்தனைகளுக்கு உள்பட்டு, பெரியவா்களின் பயன்பாட்டுக்காக கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு வழக்கமான சந்தை ஒப்புதல் வழங்குமாறு தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையத்திடம் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் கொவைட்- 19 நிபுணா் குழு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பரிந்துரை செய்தது.

அதன்படி, தடுப்பூசிகளின் விலையை நிா்ணயிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அந்த வகையில் தடுப்பூசிகளின் ஒரு தவணை விலை தலா ரூ.275 ஆகவும், சேவைக் கட்டணம் ரூ.150 ஆகவும் நிா்ணயிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT