இந்தியா

உ.பி.: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சரின் மகன்; அதுவும் எவ்வளவு தெரியுமா?

26th Jan 2022 11:34 AM

ADVERTISEMENT


புலந்த்ஷஹர்: உத்தரப்பிரதேச அமைச்சரும் ஷிகார்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான அனில் ஷர்மாவின் மகன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து அமைச்சரிடம், தேர்தல் நடத்தும் அதிகாரி அடுத்த 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி

சமூக வலைத்தளங்களில் பலராலும் பரப்பப்பட்டு வரும் இந்த விடியோவில், ஷர்மாவின் மகன் குஷ் ஷர்மா, ஒரு வாகனத்தில் வந்து கொண்டே, வாக்காளர்களுக்கு 100 ரூபாயைக் கொடுக்கிறார். அப்போது பின்னணியில் டிரம்ஸ் வாத்தியம் இசைக்கிறது. 

ADVERTISEMENT

இது குறித்து பாஜக தரப்பில் கூறுகையில், பணம் வாங்கியவர்கள் அனைவரும் இசைக் கலைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT