இந்தியா

'அனைத்து கரோனா வைரஸுக்கும் எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் ஒமைக்ரான்' - ஐசிஎம்ஆர் ஆய்வு

DIN

ஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள், அனைத்து வகை கரோனா வைரஸுக்கும் எதிராக செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து பல மருத்துவ அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய சமீபத்திய ஆய்வில், கரோனாவின் ஒருவகையான ஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் எனும் நோயெதிர்ப்பு புரதங்கள், ஒமைக்ரானுக்கு எதிராக மட்டுமின்றி, டெல்டா உள்ளிட்ட பிற கரோனா வைரஸுக்கு எதிராகவும் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

'ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். மற்ற கரோனா வைரஸ்களையும் நடுநிலையாக்குவது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக டெல்டா வைரஸுக்கு எதிராக செயல்படுவதால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு. 

இதனால் ஒமைக்ரானுக்கு எதிராக தனித்திறன் மிக்க தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும்' என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமைக்ரான் மற்றும் அதன் வகைகளால் பாதிக்கப்பட்ட நபரின் சீரம் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிநாட்டைச் சேர்ந்த பெரியவர்களும் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளம்பருவத்தினரும் பங்கேற்றுள்ளனர். 

இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் இரண்டு தவணை பைசர் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆன்டிபாடிகள் என்பது, தொற்று ஏற்படும்போது உடலில் இயற்கையாக ஏற்படும் அல்லது தடுப்பூசி மருந்துகள் மூலமாக செயற்கையாக ஏற்படுத்தப்படும் நோயெதிர்ப்பு புரதங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT