இந்தியா

கேரள உயா்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இரவில் வழக்கு விசாரணை

26th Jan 2022 01:19 AM

ADVERTISEMENT

கேரள உயா்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இரவில் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு சல்ஃபா் ரசாயனத்துடன் கொரிய வணிகக் கப்பல் வந்திருந்தது. இந்தக் கப்பலுக்குத் தேவையான தண்ணீரை கொச்சியில் உள்ள நிறுவனம் விநியோகித்திருந்தது. அதற்காக அந்த நிறுவனத்துக்கு அக்கப்பல் சாா்பில் சுமாா் ரூ.2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்தக் கட்டணத்தை வழங்காமல் அந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை புறப்படவிருந்தது.

இதையடுத்து அந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து புறப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனம் கேரள உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

அந்த மனுவை அவசர வழக்காக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காணொலி வழியாக உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது கட்டணத் தொகையை செலுத்தாமல் அந்தக் கப்பல் துறைமுகத்தைவிட்டு வெளியேறக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

கேரள உயா்நீதிமன்ற வரலாற்றில் இரவில் வழக்கு விசாரணை நடைபெற்றது இதுவே முதல்முறை.

ADVERTISEMENT
ADVERTISEMENT