இந்தியா

நாட்டில் மீண்டும் அதிகரித்த கரோனா; 2.85 லட்சம் பேர் பாதிப்பு

26th Jan 2022 09:56 AM

ADVERTISEMENT

 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2.85 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 665 பேர் உயிரிழந்தனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய விவரங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.26) வெளியிட்டது. அதில் ஒரு நாளில் மட்டும் 2,85,914 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,00,85,116-ஆக அதிகரித்துள்ளது.

படிக்கதில்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பு

ADVERTISEMENT

புதிதாக 665 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,91,127ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 2,99,073 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 22,23,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 16.16 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 93.2 சதவிகிதமாக உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT