இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜன. 31-ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம்

26th Jan 2022 11:55 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனவரி 31ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி புதன்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றவுள்ளாா். அதனைத்தொடா்ந்து கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மாா்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிகள் கூட்டமானது ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிக்கபிப்.1-இல் மத்திய பட்ஜெட்

ADVERTISEMENT

கரோனா பரவலை கருத்தில் கொண்டு தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT