இந்தியா

ஆப்பிள் ஐ-போன்களுக்கு புதிய வசதிகளை வழங்கிய வாட்ஸ்ஆப்

DIN


பல புதிய வசதிகள் இன்னமும் பரிசோதனை முறையிலேயே இருக்கும் நிலையில், ஐ-போன் பயனாளர்களுக்கு மட்டும் முன்கூட்டியே இந்த வசதிகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஐ-போன் பயனாளர்களுக்கு பிரத்யேகமாக தற்போது 22.2.75 என்ற மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்ஆப் பதிவிறக்கம் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், 

புதிய வாய்ஸ் ரெக்கார்டிங் வசதி
ஐபோனில் வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தும், பயனாளர்கள், வாட்ஸ் ரெக்கார்டிங் செய்து அனுப்பும் வசதியில் கூடுதலாக, வாய்ஸ் ரெக்கார்டிங்கை தற்காலிகமாக நிறுத்தி (பாஸ்) மீண்டும் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்து, அதனை ஒரு முறை கேட்டுவிட்டு அனுப்பும் வசதி அறிமுகமாகியுள்ளது.

தற்போது வாய்ஸ் ரெக்கார்டிங் பதிவு செய்து அனுப்ப அல்லது நிறுத்த அல்லது அழிக்கும் வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

புரொஃபைல் ஃபோட்டோ
ஒருவரிடமிருந்து வாட்ஸ்ஆப் தகவல் வந்தால், அதற்கான நோட்டிஃபிகேஷனில் அவரது பெயர் மற்றும் அவர் அனுப்பிய தகவல் மட்டுமே காட்டும். ஆனால், ஐஃபோனில் லேட்டஸ்ட் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் புரொஃபைல் ஃபோட்டோவுடன் நோட்டிஃபிகேஷன் காட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT