இந்தியா

ஒடிசாவில் மேலும் 5,891 பேருக்கு கரோனா: 7 பேர் பலி

25th Jan 2022 01:17 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவில் இன்று புதிதாக மேலும் 5,891 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

புதிதாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 12,17,842 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

7-க்கும் மேற்பட்டோர் கரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,532 ஆக உயர்ந்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மொத்தம் 11,31,917 இதுவரை குணமடைந்தனர். 

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு விகிதம் 9.85 ஆக உள்ளது.  மேலும் ஒரேநாளில் 59,807 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 852 பேர் குழந்தைகள் ஆவர். 

குர்தாவுடன் சுந்தர்கர் மற்றும் கட்டாக் ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,500-க்கும் அதிகமாக உள்ளதால் சிவப்பு மண்டலமாகவும், பாலசோர், ஜாஜ்பூர் மற்றும் சம்பல்பூர் ஆகிய 15 மாவட்டங்கள் மஞ்சள் மண்டலத்தில் 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் உள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT