இந்தியா

‘இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும்’: உச்சநீதிமன்றம்

25th Jan 2022 12:06 PM

ADVERTISEMENT

வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் வரிப்பணத்தில் இலவசங்கள் தருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க | மத்திய அரசின் குடியரசு நாள் பதக்கம்: தமிழக காவலர்களின் பட்டியல்

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை எனத் தெரிவித்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT