இந்தியா

உச்சநீதிமன்றத்தில் 13 நீதிபதிகளுக்கு கரோனா

25th Jan 2022 12:08 PM

ADVERTISEMENT

 

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் 13 நீதிபதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்துள்ளார்.

கரோனாவின் தாக்கம் நாடு முழுவதிலும் அதிகரித்து வரும் வேளையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள 32 நீதிபதிகளில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்ற அலுவலகங்களில் பணிபுரியும் பல ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் நீதிபதிகள் பணியாற்றி வருவதாகவும் உச்சநீதிமன்றம் கவலை அளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT