இந்தியா

‘அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பகத் சிங் படங்கள் வைக்க வேண்டும்’: கேஜரிவால்

25th Jan 2022 10:53 AM

ADVERTISEMENT

தில்லி குடியரசு நாள் விழாவையொட்டி தேசிய கொடி ஏற்றிவைத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

நாடு முழுவதும் நாளை 73-வது குடியரசு நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தில்லியில் இன்று தேசிய கொடியை முதல்வர் கேஜரிவால் ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் கேஜரிவால்,

“அனைத்து குழந்தைகளுக்கு கல்வி என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற நாங்கள் இன்று உறுதியேற்கிறோம். கடந்த 7 ஆண்டுகளாக கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தியுள்ளோம். முன்னாள் அமெரிக்க முதல் பெண்ணான மெலனியா டிரம்ப் தில்லி அரசு பள்ளிகளை பார்வையிட்டுள்ளார்.

ADVERTISEMENT

விரைவில் கரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா உறுதியாகும் விகிதம் கடந்த 10 நாள்களில் 20 சதவீதம் குறைந்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி 30 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 10 சதவீதமாக உள்ளது. கரோனா தடுப்பூசியின் சீரான செயல்பாடே இதற்கு காரணம் எனத் தெரிவித்தார்.

தில்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் புகைப்படங்கள் வைக்க வேண்டும்.”

ADVERTISEMENT
ADVERTISEMENT