இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்பிஎன் சிங் பாஜகவில் இணைந்தார்

25th Jan 2022 04:29 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்பிஎன் சிங் இன்று (செவ்வாய்க்கிழமை) பாஜகவில் இணைந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸுக்கு இது இரண்டாவது பெரிய இழப்பு. கடந்தாண்டு ஜிதின் பிரசாதா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசில் அவர் அமைச்சரானார்.

இந்த நிலையில், ஆர்பிஎன் சிங்கும் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

இதையும் படிக்கஅச்சுறுத்தும் ஐஏஎஸ் பணித் திருத்தங்கள்: மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்?

ADVERTISEMENT

இதுபற்றி, ட்விட்டர் பக்கத்தில் ஆர்பிஎன் சிங் பதிவிட்டுள்ளதாவது:

"இது எனக்குப் புதிய தொடக்கம். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது தலைமை மற்றும் வழிகாட்டுதலில் நாட்டிற்கு பங்களிப்பதை எதிர்நோக்கியிருக்கிறேன்."

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில், "நாட்டுக்கும், மக்களுக்கும், கட்சிக்கும் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கபாஜகவில் இணைந்த ஆர்பிஎன் சிங் யார்? காங்கிரஸிலிருந்து விலகியது ஏன்?

ஆர்பிஎன் சிங் ஜார்க்கண்ட்டில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக உள்ளார். உத்தரப் பிரதேச முதற்கட்ட தேர்தலுக்கான 30 பேர் அடங்கிய நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் ஆர்பிஎன் சிங் பெயரும் இடம்பெற்றிருந்தது. முன்னதாக, கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் குஷிநகர் தொகுதியில் போட்டியிட்டு சுவாமி பிரசாத் மௌரியாவைத் தோற்கடித்தார். பத்ரௌனா சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

Tags : UP Election
ADVERTISEMENT
ADVERTISEMENT