இந்தியா

தேசியக் கொடியை அவமதித்ததாக அமேசான் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு

25th Jan 2022 05:08 PM

ADVERTISEMENT

 

பிரபல மின்னணு வணிக நிறுவனமான அமேசான் மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் விற்பனைத் தளத்தில் மூவர்ணக் கொடியை பிரதிபளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான ஆடைகள், டிஷர்ட்-கள், காலணிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில், இதனைக் கண்டித்து நேற்று(ஜன.24) இணையத்தில் அமேசான் நிறுவனம் தேசியக் கொடியை அவமதித்துவிட்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா  அமேசான் மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT