இந்தியா

உ.பி. தேர்தல்: காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

24th Jan 2022 03:25 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இந்நிலையில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் 30 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இதில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், பூபேஷ் பாஹேல், சச்சின் பைலட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ‘ஆம் ஆத்மிக்கு ஆதரவாக விடியோ போடுபவர்களுடன் உணவு அருந்துவேன்’: கேஜரிவால்

பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT