இந்தியா

தேசியவாத காங். தலைவர் சரத் பவாருக்கு கரோனா

24th Jan 2022 03:07 PM

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு திங்கள்கிழமை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா மூன்றாம் அலை பரவியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சரத் பவாருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சரத் பவார் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,

“எனக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நலமாக உள்ளேன். எனது மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி வருகின்றேன்.

ADVERTISEMENT

கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

 

ADVERTISEMENT
ADVERTISEMENT