இந்தியா

மகாராஷ்டிரம்: ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து

24th Jan 2022 03:12 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம்

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரின் இச்சல்கரஞ்சி தாலுகாவில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக தொழிற்சாலை உள்ள பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்த விபத்தினால் தொழிற்சாலை அருகே உள்ள ஒரு துணிக்கடையும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT